தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா (2010) செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் அங்கு நடைபெறுகிறது.
தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானப் பணிகள் 1006-ம் ஆண்டு தொடங்கி 1010-ம் ஆண்டில் முடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் என்று பெரிய கோயில் அழைக்கப்படுகிறது. உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அது விளங்கி வருகிறது.
10-ம் நூற்றாண்டுக் காலத்தில் சோழப் பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்த போது, ராஜராஜ சோழ மன்னனால் பெரிய கோயில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் ராஜராஜேஸ்வரம் எனவும் பின்னர், நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது.
17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்ட போது, பிருகதீசுவரம் ஆனது. இந்தக் கோயில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியச் சின்னமாக கடந்த 1987-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
விழாவை ஒட்டி தஞ்சை நகரில் சில மேம்பாட்டு பணிகள் நடத்தப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோயில் வளாகத்தில் ஏதாவது பராமரிப்பு பணிகள் செய்வார்களா தெரியவில்லை.
வர்ணம் பூசி அதன் பாரம்பரிய அழகைக் கெடுத்துவிடுவார்களா தெரியவில்லை.
இப்படி இருக்கும் அதன் ஒரிஜினல் கலர்....
இப்படி ஆகிவிடக்கூடும்...
கோயில் தூண்கள், சுவர்கள், மற்ற இடங்களை. sand blasting முறையில் ஓரளவிற்கு அதன் பாரம்பரியத் தன்மை மாறாமல் ஓரளவிற்கு நல்ல முறையில் சுத்தம் செய்ய முடியும்.
ஓவியங்களை சுத்தம் செய்ய இந்த முறை அவ்வளவாக சரிப்பட்டு வராது.
அதன் மேல் சுண்ணாம்பை அடிக்காமல் தகுந்த முறையில் திறமை மிக்கவர்களைக் கொண்டு மேம்படுத்தினால் நல்லது.
25.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
”தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் மேம்பாடு, பெரியகோயில் முதல் மருத்துவக் கல்லூரி வரை தெரு விளக்குகள், நவீன சுகாதார வளாகங்கள், ராஜராஜசோழன் சிலை நிறுவப்பட்டுள்ள பூங்காவை அழகுபடுத்துதல், பெயர்ப் பலகைகள் மற்றும் தகவல் பலகைகள் அமைத்தல், சாமந்தான்குளத்தினை மேம்படுத்துதல், பெரியகோயில் அருகிலுள்ள ஜி.ஏ. கால்வாயின் பாலத்தை அகலப்படுத்துதல் ஆகிய அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.”
என்று தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோயில் வளாகம் எப்படி மாறும் என்று தெரியவில்லை.
இருபது வயசு............... ஆச்சு !
4 hours ago