Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Jun 15, 2010

சென்னை! என்னை ‘போடா வெண்ணை!” என்றது.




யூடியூப் முதலிய வலைத்தளங்களில் இருக்கும் பல வீடியோக்களைப் பார்த்தால் வேடிக்கையாக அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

பலரும் இதில் பயனராக சேர்ந்து கொண்டு தங்கள் திறமையைக் காட்டுகிறார்கள் (உனக்கு இப்பத்தான் தெரியுமாக்கும் என்று கேட்காதீர்கள்).

http://youtube.com/


இதில் தங்களுக்குப் பிடித்த (பிட்டு!) படங்களயும், தாங்கள் ரசித்த காட்சிகளயும் போட்டு வைக்கிறார்கள்.

சிலர் தங்களுடைய சொந்த தயாரிப்புகளையும் வலையேற்றுகிறார்கள்.

உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் தொடர்பு உடைய இந்த சுட்டியைப் பார்க்கலாம்.

youtube account தொடங்குவது எப்படி?

நானும் முயற்சித்தேன்.

உதாரணத்திற்கு மேலே உள்ள படம்.

இதில்..

வீடியோ : என்னுடையதில்லை.
ஆடியோ : என்னுடையதில்லை.
ரீமிக்ஸ் மற்றும் வலையேற்றம் மட்டுமே என்னுடையது.

May 30, 2010

மொக்கைப் பதிவா? அப்பிடின்னா என்னங்க?

பதிவு ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு. என்ன புது பதிவு ஒண்ணும் காணோமே? என்று ஏகப்பட்ட! புகார். என்ன செய்யலாம்?
இது தான் புதுப் பதிவர்களின் இன்றைய பிரச்னை!



கதை, நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை… இப்படி ஏதாவது எழுதலாமே.?
அப்புறம் புத்தகமெல்லாம் கூட போடலாம்?

அதெல்லாம் ஒண்ணும் தெரியாது..



செய்தி விமர்சனம், பார்த்தது, படித்தது. இப்படி ஏதாவது?

எல்லாரும் முன்னாடியே போட்டுர்றாங்களே?


ஏதாவது சினிமா விமர்சனம்.?
அரைத்த மாவையே அரைக்கிறார்கள். இசை இம்சை. ஒளிப்பதிவு ஒப்பேறவில்லை. இப்படி ஏதாவது எழுத வேண்டியதுதானே?

சினிமாவெல்லாம் பாக்குறது இல்ல.


அழகு, ஆரோக்கிய குறிப்பு, சமையல் குறிப்பு?

ஒரு குறிப்பும் தெரியாது.


பிடித்தது, பிடிக்காதது, ரசித்தது, திட்டியது?

அதைத்தான் எல்லரும் பதிவாகப் போடுகிறார்களே?



எல்லாப் பதிவுக்கும் போய் அனானியாக பின்னூட்டமாவது போடவேண்டியது தானே

ஆட்டோ அனுப்பிட்டா?


ஏதாவது மொக்கைப் பதிவாவது போடவேண்டியதுதானே?
அப்புறம் புத்தகமெல்லாம் கூட போடலாம்?


மொக்கைப் பதிவா? அப்பிடின்னா என்னங்க?

Jul 24, 2009

ஆஹா! வடை போச்சே!

Top 10 - Talk of the வலை உலகம்!

1. 'வடை போச்சே' என்பது பற்றி பல பதிவர்கள், பதிவு மற்றும் பின்னூட்டத்தில் புலம்பி இருக்கிறார்கள்.

2. 32 கேள்விகள் பிரபலமாக இருந்தது போய் இப்பொழுது பத்து!
பத்து வழிகள், பத்து விமர்சனம், பத்து கேள்விகள், பிடித்த பத்து, பிடிக்காத பத்து என்கிற வகையில் எல்லோரும் பதிவிட ஆரம்பித்துள்ளார்கள்.

3. சுமார் பத்துக்கு மேற்பட்ட புது திரட்டிகள் எல்லாப் பதிவுகளுக்கும் போய் இணைத்துக் கொள்ளும்படி பின்னூட்டம் போடுகிறார்கள்.

4. எப்பொழுதும் 10 விருதுகளாவது வலையுலகில் வழங்க! அல்லது வாங்கப் படுகிறது.

5. கவிதை, கட்டுரை, கதைகள், நகைச்சுவை இவற்றை விட மொக்கை பதிவுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

6. எல்லாப் புதிய பதிவர்களும் 10 இடுகைகளுக்குப் பிறகு சோர்ந்து விடுகிறார்கள்.

7. பத்து followers கிடைத்த பிறகு கிடைக்கும் சந்தோஷத்தில் உடனே 10 பதிவுகளுக்குப் போய் பின்னூட்டம் போடுகிறார்கள்.

8. பல பதிவர்கள் பின்னூட்டத்திற்கான மேட்டரையெல்லாம் அடுத்த பதிவிற்கான மேட்டராக ஆக்கிவிடுகின்றனர்.

9. Copy (Ctrl C) - Paste (Ctrl V) மட்டும் இல்லை என்றால் பல பதிவர்கள் இங்கே ஜல்லியடிக்க முடியாது.

10. பரபரப்பான தலைப்பை வைத்துவிட்டு அதற்கேற்ப விஷயம் கிடைக்காமல் பதிவர்கள் முழிக்கிறார்கள்!

Jul 13, 2009

மெஸ்மரிஸம் கற்றுக்கொள்ளுங்கள்! (இலவசமாக)

உங்கள் கண்களில் அதீத சக்தி இருக்கிறது. சும்மா உற்றுப் பார்ப்பதின் மூலமே உங்கள் சக்தியை வெளிப்படுத்த முடியும்

சரி. கீழ்க்கண்ட படத்தைப் பார்க்கவும்.





இதில் சில சக்கரங்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

'மெனக்கெட்டு' வாழ்க என்று சொல்லிவிட்டு, அதில் ஒன்றைக் கூர்ந்து பார்க்கவும்
அந்த சக்கரம் அப்படியே நின்று விடும்.

அப்படியே மெதுவாக அடுத்த சக்கரத்தைப் பார்க்கவும்.அந்த சக்கரம் நின்று விடும்.
எதை உற்றுப் பார்க்கிறீர்களா அந்த சக்கரத்தை நிறுத்தும் சக்தியை மெனக்கெட்டு பெறலாம்.

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கியும் பார்க்கலாம்.

எச்சரிக்கை : 'பலான' படங்களில் இது போல் ரொம்ப நேரம் உற்றுப் பார்க்க வேண்டாம்.

Jun 22, 2009

சமீபத்திய மாடல் பைக் படங்கள்!

சமீபத்தில் வந்த சில மோட்டார் பைக் மாடல்கள்

(டோண்டு சார் பதிவுகள் (அதிகம்) படித்ததன் விளைவுகள் - 1)
http://dondu.blogspot.com/


(படங்களின் மேல் கிளிக்கி இன்னும் பெரிதாகப் பார்க்கலாம்!)










Jun 9, 2009

சும்மா ஒரு பந்தாவுக்கு! : கேள்வி – பதில்

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
‘மெனக்கெட்டு’ எதையும் செய்தால் தான் அது வெற்றி பெறும். எனக்கு பிடித்த / உற்சாகத்தைத் தரும் பெயர்.

2) கடைசியா அழுதது எப்போது?
ஞாபகம் இல்லை.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
மிகவும் பிடிக்கும். பொறுமையாக எழுதினால் நன்றாகவே இருக்கும்

4) பிடித்த மதிய உணவு?
தயிர் சாதம். ஊறுகாய்

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
இல்லை. அவர்களாக வரட்டுமே என் நட்பு தேவைப்பட்டால்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
நல்ல தண்ணீர் உள்ள ஏரி அல்லது குளம்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
ஆணா, பெண்ணா என்று சொல்லவில்லையே

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: நான் செய்யும் எல்லாம் தான்.
பிடிக்காதது: செய்வது இல்லை

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடித்தது: மிகுந்த திறமை சாலி
பிடிக்காதது: என்னை விட திறமை சாலி என்று நினத்துக்கொள்வது.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
.பலரும் பக்கத்தில் வருகிறார்கள். பலரும் இல்லாமல் போகிறார்கள். எதைக்குறிப்பிட்டு சொல்வது.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
வெளிர் நீல சட்டை
அடர் நீல பேன்ட்!

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
டீவி, 70s – 80s இளையராஜா பாடல்கள்

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
நீலம்

14) பிடித்த மணம்?
லாவண்டர், மகிழம்பூ,.சில முகப் பவுடர், சில சோப்

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
டோண்டு சார், :
• பதிவுலகில் ஒரு ஆல்ரவுண்டர் .

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
மொக்கை பதிவுகள் தான். பல விஷயங்கள் மொக்கைகளில் இருந்தும் கிடைக்கும்.

17) பிடித்த விளையாட்டு?
குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை.

18) கண்ணாடி அணிபவரா?
படிக்கும் போது.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
விட்டலாச்சார்யா!

20) கடைசியாகப் பார்த்த படம்?
மடகாஸ்கர் - எஸ்கேப் 2 ஆப்ரிக்கா.

21) பிடித்த பருவ காலம் எது?
மிதமான கோடை, மிதமான மழை, மிதமான குளிர்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
விக்கிரமாதித்தன் கதைகள்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
பழைய படம் போரடித்த நாளில்.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
காதில் கேட்க போதுமான வால்யூமில் உள்ள சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு கோடியில் உள்ள ஒரு நாடு சுமார் 7100 கிலோமீட்டர்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
எல்லாமே தனித்திறமை தான்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அது அந்தந்த விஷயங்களைப் பொருத்தது

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
தமிழ் நாட்டில் பல இடங்கள்!

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக! இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
ஷாப்பிங்

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
வாழு. வாழவிடு.

Mar 27, 2009

திராட்சை சாப்பிடறீங்களா?

ஒரு நாள் பஸ்சுக்கு காத்திருந்தேன். சற்று தள்ளி ஒருவன் தள்ளுவண்டியில் திராட்சை விற்றுக்கொண்டிருந்தான். பஸ் ஸ்டாப்பில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அப்பொழுது தான் ஒரு பஸ் போயிருக்க வேண்டும்.

தள்ளுவண்டிக்காரன் என்னிடம் பேச்சுக்கொடுத்தான்.

“என்ன சார் பஸ்சுக்கு நிக்கிறீங்களா?”
(இது என்ன கேள்வி? பின்ன பிளேனுக்கா நிக்கறேன்?)

“ஆமாப்பா, எப்ப வரும்னு தெரியல.”

“எனக்கும் தெரியாது சார், நான் இன்னைக்கு இங்க நிப்பேன், நாளைக்கு ரெயிலடியில இருப்பேன். அடுத்த நாள் இன்னொரு எடம்“

“என்ன வெயில் சார். ரெண்டு நாளா நல்ல மழை இன்னிக்கு எப்பிடி வெயில் அடிக்குது”. சொல்லிக்கொண்டே மூக்கை சிந்தி சற்று தள்ளி உதறினான்.

“உங்களுக்கு ஒரு அரைக்கிலோ போடவா? அருமையான திராட்சை சார். கொட்டையில்லாதது. சீசன் முடியப்போகுது மகாராஷ்டிராவில இருந்து வரணும். டிசம்பர்ல ஆரம்பிச்சு ஏப்ரல் வரைக்கும் இருக்கும்”.

“வேண்டாம்பா நேத்துத் தான் அரை டஜன் வாழைப்பழம் வாங்கினேன் இன்னும் அப்பிடியே இருக்கு. அப்புறம் பார்க்கலாம்”

(மூக்கை சிந்தி.. அந்தப்பக்கம் திரும்பி உதறிவிட்டு கால் சட்டையில் துடைத்துக் கொண்டான்)

“என்னப்பா ஜலதோசமா?”

“ஆமா சார் தடுமன் புடிச்சுகிச்சு, ரெண்டு நாலா மழைல்ல”

“ஏம்பா கர்சீப் எதுவும் கொண்டு வரலையா?”

“துண்டா சார்? என்னா சார் செய்றது அவசரத்தில வந்திட்டேன்.”

“ஏம்பா இந்த பழத்தில் தண்ணியெல்லாம் தெளித்து கழுவலாமே”

“அட நீங்க ஒண்ணு தண்ணி ஊத்துனா அப்பிடியே அழுகிடும்”

ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் என்று சத்தத்துடன் சளியை உதறினான்
(இந்த முறை கால் சட்டையில் துடைத்துக்கொள்ளவில்லை போல இருக்கே?)



“ஒரு நாளைக்கு எவ்வளவு மெட்ராசுக்கு வருதுன்னு நினனக்கிறீங்க. சுமார் 100 டன். விலை இறங்கிப்போச்சு சார் வித்து தள்ளியாகணும்.
ஒரு பெட்டிக்கு அஞ்சு கிலோ ரூ 180க்கு எடுக்கிறோம்.

மீண்டும் ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்.


“திராட்சை….திராட்சை அரைக்கிலோ இரூபது ரூபா” கத்தினான்

அப்பொழுது இன்னொருவர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார்.
“ஒரு அரைக்கிலோ போடுப்பா” என்றார்.

பழங்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்

தராசுக்குள் கவனித்தேன் ஒரு மாதிரி வெளிர் பச்சையாக தெரிந்தது. சூரிய ஒளி பட்டு பளபளத்துக் கொண்டிருந்தது.
(திராட்சையும் தான்)

Mar 5, 2009

முக்கிய அறிவிப்பு !

வலைபதியும் அன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

கீழ்க்கண்ட பதிவர் வலைப்பெயர், புனைப்பெயர்கள் காப்பிரைட்டுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. என் அனுமதியில்லாமல் யாரும் பயன் படுத்த வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அசலூரான்
அசிங்கம்
அப்பவே சொன்னேன்
அரை உழக்கு
ஆட்டய போட்டவன்
ஆள் அம்பு
இப்பவும்
உசக்கை
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்
ஏடாகூடம்
ஒண்டிக்கு ஓண்டி
கரி நாக்கு
கருமம்
கலிகாலம்
கவுரதை
காலக் கெரகம்
குட்டிச்சுவர்
கும்பிடரேனுங்க
குரங்குப் பெடல்
கோடாங்கி
கௌபீனம்
சவத்த தள்ளு
சாணி
சீட்டியடிப்பவன்
சூடு சொரணை
சூதுவாது
சொம்பு
சோப்ளாங்கி
சோம்பேறி
ஞொக்க மக்கா
டவுசர்
தற்குறி
தத்துபித்து
திண்ணை தூங்கி
துஷ்டன்
தெண்டம்
நரக வாசி
நாக்கு வழிப்பவன்
நாராசம்
நாலுந் தெரிஞ்சவன்
பன்னாடை
பாக்கலாம்பா
பெரிசு
பையப்போ
மய்க்காநாள்
மூளைக்காரன்
விசாரித்தவன்


மேற்கண்ட பதிவர் / வலைத்தள பெயர்கள் / புனைப்பெயர்கள்
நான் யோசித்து வைத்தவை. ஒரு வேளை நான் வேண்டாமென்று விட்டுவைத்து, அது வேண்டுமென்றால் ஒரு நல்ல ராயல்டி கொடுத்து பயன்படுத்தலாம் !

--பதிவர் பெயர்கள் இன்னும் தொடரும்!



கீழ்கண்ட பதிவர்கள் பெயர் வைப்பதில் எப்படியோ முந்திக்கொண்டதனால் போகட்டும் என்று விட்டு விடுகிறேன்,

மேலும் இவர்கள் கொஞ்சம் (மொக்கையாக இருந்தாலும்) சுவாரசியமாக எழுதி என் favorite லிஸ்டில் இருப்பதால் பிழைத்துப்போகட்டும் !


டோண்டு
இலவசம்
யாத்ரீகன்
எண்ணங்கள்
அசடு (http://www.asadu.blogspot.com/ ஒண்ணுமே பதியல, தெண்டம்)
அம்மாஞ்சி
ஆடுமாடு
இணைய குசும்பன்
இம்சை
இம்சை அரசி
உருப்படாதது
உளரல்கள்
கப்பி பய
கிருக்கன்ஸ்
கும்மாளம்
கைப்புள்ள

சும்மா (அநியாயம்! இந்த தமிழ் பெயரை summa.blogspot.com ஒரு illinois வெள்ளைக்காரன் தட்டிக்கிட்டு போய்ட்டான்.)

தெரியல!
நடைவண்டி
பிச்சைப்பாத்திரம்
பினத்தல்கள்
பைத்தியக்காரன்
யளனகபக (இதே மாதிரி ஆங்கிலப்பதிவு http://www.asdfgf.blogspot.com/)
யோசிங்க
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
வெட்டிப்பயல்
வெட்டிவம்பு

--சரி நடந்தது நடந்து போச்சு. இனிமேல் ஜாக்கிரதையாக இருப்போம்!

மஞ்சுவிரட்டு / ஜல்லிக்கட்டு காளையும் நானும்

ஊர் திருவிழா மற்றும் பொங்கல் சமயங்களில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.

எவ்வளவோ முயற்சித்தும் பலமுறை கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

ஆண்டுதோறும் நடக்கும். இந்த ஆண்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால் கிராமத்தினர் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

இந்த முறை ஊரில் இருந்தேன். தோதாக லீவு வேறு.

இந்த முறை எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

ஆரம்பிப்பதற்கு வெகு முன்னரே சென்றுவிட்டேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன.
ஏகப்பட்ட போலிஸ் பாதுகாப்பு வேறு.

ஆரம்பித்து விட்டது. காளைகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

எதிர்பட்ட அனைவரையும் முட்டிமோதி தள்ளிக்கொண்டு சென்றன.

கூரான கொம்பு, உருண்டு திரண்ட திமில். பார்பதற்கே பயங்கரமாக இருந்தன.
வர்ணனையாளர்கள் பீறிடும் இரத்தத்தையும் வர்ணித்து கொண்டிருந்தார்க்ள்.
தூக்கி வீசப்பட்ட இளைஞர்களை டாக்டர்கள் குழு அவசர சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள்.

சிலருக்கு கை காலில் காயம். சிலருக்கு குடல் சரிந்து தூக்கிக்கொண்டு காப்பற்ற ஓடிக்கொண்டிருந்தார்கள்.

காளைகளின் கொம்புகளில் இரத்தம்.

வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஊரில் இதைக் காட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

ஒரு காளை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நல்ல கூரிய கொம்பு. சிலுப்பிகொண்டும் உறுமிக்கொண்டும் இருந்தது. அதன் மேல் இரத்தகலராக இருந்தது.

குங்குமத்தை கொட்டியிருக்கிறார்களா? அல்லது யாரையும் முட்டிய இரத்தக்கரையா?

எனக்கு அருகில் வந்தது. என்ன ஒரு பத்து பனிரெண்டு அடி தூரம் இருக்குமா?

ரொம்ப நேரம் சுற்றி வந்தது. இன்னும் நெருங்கட்டும் பார்க்கலாம்.

கொம்பால் தரையை குத்திக் கிழித்தது. புழுதி பறந்தது. காலால் மண்ணை கீறியது. உறுமியது.

"யார் கிட்ட விளையாடுறே. வா ஒரு வழி பண்ணிடறேன்".

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தது. இப்ப திமிலை அமுக்கிப் பிடித்து ஒரேயடியா மோதி
மடக்கி விடலாம் என்று நினைத்தேன். அப்போ தான் பின்னாலேருந்து ஒருத்தன் துரத்திக்கொண்டு வந்தான். அடச்சே! நேராக ஒடிவிட்டது.

"அடேடே.. அப்புறம்".

அப்புறமென்ன.. எவ்வளவு நேரந்தான் தென்னை மரத்து மேலேயே இருக்கிறது?.
இறங்கி வீட்டுக்கு போயிட்டேன்.

Mar 4, 2009

வேர்கடலையும், செருப்பும், புத்தகமும் மற்றும் மேட்டர் சிடியும்

(ஹி ஹி! பின்நவினத்துவம், நான்லினியர், கவிதைகளும் இன்றைய இலக்கியமும்! அப்டீன்னெல்லாம் எழுதலாம்னா, ஒண்ணும் தோணமாட்டேங்குது.அதுனால..)

வேர்கடலையும், செருப்பும், புத்தகமும் மற்றும் மேட்டர் சிடியும்

ஒரு நாள் நண்பர் ஒருவருடன் சினிமாவிற்கு போக பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தேன். பஸ் வரக்காணோம். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அருகே ஒரு தள்ளுவண்டியில் ஒருவன் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வறுக்கும் வாசனை வந்து கொண்டிருந்தது. நண்பர் வேர்கடலை வாங்கலாம் என்றார். அவன் இரண்டு பேருக்கும் கொடுத்துவிட்டு "3 ரூவா குடு சார்" என்றான்.

நண்பர் பணத்தை கொடுத்துவிட்டு என்னிடம் மெதுவாக சொன்னார். “பாருங்க சார் அநியாயம் ஐம்பது காசு பெறும். கூசாமல் 1.50 சொல்கிறான்" என்றார்.

“சார் அவன் 100 பேருக்கு விற்று தான் ரூ 100 பார்க்க முடியும். நீங்களே சொல்லுங்க, அவனுக்கும் குடும்பம் குட்டி இருக்கும். என்ன பண்ணுவான்” என்றேன்.


இப்படி பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்த போது அவர் செருப்பு அறுந்து விட்டது.

பஸ் ஸ்டாப் அருகே இருந்த செருப்பு தைப்பவரிடம் கொடுத்து எவ்வளவு என்று கேட்டார்.

“பன்னெண்டு ரூவா ஆகும் சார் வேணா பத்து ரூவா குடு.”

நண்பர் 6 ல் ஆரம்பித்து 8 ரூபாயில் பேரம் முடித்தார்.

ஒருவழியாக தைத்து முடித்து வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

நண்பர் சொன்னார். “பத்து நிமிடம் ஆகியிருக்குமா? சின்ன வேலை இதற்குப் போய் பன்னெண்டு ரூவா கேட்டான்”

“விடுங்க சார் நாள்பூரா காத்திருக்க வேண்டும். ஒரு பத்துப் பேராவது வந்தால் தான் அவனுக்கு இன்றைய பொழுது ஓடும்.” என்றேன்.

இப்பொழுது பஸ் வந்து விட்டது.

ஏறி இறங்கி தியேட்டர் நோக்கி நடந்தோம்.

பிளாட்பார்மில் ஒரு புத்தகக் கடையைப் பார்த்தேன். பலவகையான புத்தகங்கள்! நாவல்கள், கதைகள், கட்டுரைகள் சரோஜாதேவி புக்ஸ் கூட இருந்தது.

சில பாக்கெட் நாவல்கள் எடுத்து விலை கேட்டேன் மொத்தம் 70 ரூவா குடுங்க என்றான். பேரம் பேசி 30 ரூபாய் குடுத்துவிட்டு புறப்பட்டேன்.

நண்பர் ஏதோ கேட்க வாயெடுத்து பிறகு ஒன்றும் சொல்லாமல் வந்தார்.

அடுத்து ஒரு சிடி கடையைப் பார்த்தேன். பிளாட்பார்மில் கடை விரித்திருந்தான்.
விசிடி, எம்.பி.3, பழைய பாடல்கள், புதிய பாடல்கள், காமெடி, ஒலியும் ஒளியும், படங்கள். இன்னும் நிறைய இருந்தது.

“எவ்வளவுப்பா?” “சார் 35 ரூவா உங்களுக்கு 30 ரூவாக்கி தர்றேன்.”

“25க்கு தருவியா?”

அவன் முனகிக்கொண்டே, “சரி சரி எடு சார்” என்று சொல்லிவிட்டு அடுத்த வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தான்

சில எம்.பி.3 சிடி செலக்ட் பண்ண்டிக்கொண்டிருக்கும் போது நண்பர் பொறுக்க முடியாமல் கேட்டார் “உங்களுக்கே தெரியும் சொல்லுங்கள் ஒரு சிடி அடக்கவிலை எவ்வளவு? 25க்கு கேட்கிறீர்களே. அநியாயம்! என்னை மட்டும் சொல்றீங்க.?

Blank CD எவ்வளவு? “8 அல்லது 10 ரூவா”
CD Recording ? 6 அல்லது 8 ரூவா”
Label printing, Plastic cover?

“என்ன...மொத்தம் 22 ரூவா இருக்கலாம். அப்படியும் லாபம் தானே?” என்றேன்.

நண்பர் “1 சிடிக்கு 3 ரூவாயா? இவனுக்கும் குடும்பம் இருக்கலாம்” எப்ப எவ்வளவு சிடி வித்து சம்பாதிப்பது, குடும்பத்தை நடத்துவது?” என்றார்.

இப்பொழுது சிடிக்காரன் “எடுத்தாச்சா சார்” என்றான். “ஆச்சுப்பா”

“சார் ‘மேற்படி சிடி’ கேக்குறார்” என்றேன்.
“என்ன?”

“சார் ‘மேட்டர் சிடி’ கேக்குறார்பா” என்றேன்” நண்பர் கேட்கவேயில்லையே என்று விழித்தார்.

சிடிக்காரன் அவரிடம் திரும்பி “எல்லாம் இருக்கு சார், 80 ரூவா, வேணா சாருக்காக 70 ரூவாக்கி தரலாம்.”

“என்னிடம் குனிந்து என்ன சொல்றான்” என்றார்

“மேட்டர் சிடி, அதாவது ஷகிலா, மரியா, ரேஷ்மா, பிரதிபா, சஜினி, மலையாளப் படம், அஞ்சரைக்குள்ள வண்டி, மழு, பிடிக்கிட்டாப் புள்ளி, அவளோட ராவுகள், அடல்ஸ் ஒன்லி, புளூ பிலிம், ‘ஒரு மாதிரி’ சிடி எல்லாம் இருக்காம்!”

நண்பர் என்னை முறைத்தார்.

“சார் 60க்கு எடு சார் நாலஞ்சு தான் பாக்கி, இன்னிக்கு 30, 35 தான் கொண்டுவந்தேன்.”

கடைக்காரனிடம் எம்.பி.3 க்கு செட்டில் செய்து,
“அவர் மிட்நைட் மசாலா பார்த்துக்கிறாராம். இன்னொரு நாள் பாக்கலாம்.” என்று விட்டு நகர்ந்தேன்.

நண்பரிடம் சொன்னேன், “கேட்டீர்களா ! சாயங்காலம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 மேட்டர் சிடி வித்திருக்கான் 30 x 30 தொள்ளாயிரம் லாபம்!
இவன் நம் வியாபாரத்தை நம்பியில்லை. புரிந்ததா?

என்றாவது ஒரு நாள் அவர் மேற்படி சிடியை 45க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கலாம்! கருப்பு பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை. (இன் பண்ணாமல்) பார்த்தால் விசாரித்ததாக சொல்லுங்கள்! பார்த்து ரொம்ப நாளாகிறது !.