Oct 16, 2009
தீபாவளி எப்படி கொண்டாடுகிறோம்?
---------------x---------------x---------------
தீபாவளி, ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி இப்பண்டிகையை சீக்கியர்களும், சமணர்களும் கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை(?)யில் எழுவர்.
எண்ணெய்க் குளியல்(?) (கங்கா குளியல்) செய்வர்.
மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய(?) உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர்.
அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை!)
ஆண்கள் வேட்டி(?)யும் உடுப்பர்.
தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம்(!) ஒலிக்கும்.
அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறி(?)க்கொள்வர்.
பரிசுகள்(?) தந்து மகிழ்வர்.
பெரியோரை வணங்கி(?) வாழ்த்து பெறுவர்.
தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு(?) உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.
அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர்.
அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
நன்றி : விக்கிபீடியா
---------------x---------------x---------------
இப்பொழுதெல்லாம் எப்படி கொண்டாடுகிறோம்?
வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊர் செல்ல படாத பாடு படவேண்டியிருக்கிறது.
லீவு கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்தாலும், பஸ்களில் இடம் கிடைப்பதில்லை. பல மடங்கு கட்டணம் கொடுக்கவேண்டும்.
இரயில்களில் கூட்டம் (சொல்லவே வேண்டாம்) பலநாட்களுக்கு முன்பே அனைத்தும் புக் ஆகிவிடும்.
முன்பெல்லாம் தீபாவளி போனஸ் எல்லாம் கொடுப்பார்கள். இப்பொழுது?
வேலையில் இருந்தாலே போதும் என்ற நிலை.
வாழ்த்து அட்டைகள் வாங்க கூட்டம் அலைமோதும். இப்பொழுது email greetings.சில நேரம் அதுவும் கிடையாது.
ஸ்வீட், காரம் வீட்டிலேயே செய்வார்கள். இப்பொழுது கடைகளில் வாங்குவதோடு திருப்திப் பட்டுக்கொள்கிறார்கள்.
காலத்திற்கேற்ப அனைத்தும் மாறுகிறது. நாமும் மாறுகிறோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இப்போதெல்லாம் தீபாவளி அன்று தொலைக்காட்சி முன் அமர்ந்து, சந்தோஷத்தை தொலைக்கின்றோம்.
நன்றி இராகவன் சார்.
தீபாவளி நைஜீரியாவில் தானா?
Post a Comment