Mar 27, 2009

மலை மேலிருந்து குதித்த அனுபவம்

ஆபிஸில் ஏகப்பட்ட வேலை. மீட்டிங் மீட்டிங் என்று நாள் முழுவதும் ஒரே பிசி. பல பிரச்னைகள் அலசப்பட்டன. நிறைய திட்டு வாங்கி பதில்லுக்கு திட்டி ஏகப்பட்ட களேபரம்.

எல்லோரும் வீட்டுக்கு கிளம்பும் போது திடீரென்று கணேஷ் சொன்னான்.

“நாளைக்கு மலை மேலிருந்து குதிக்க போகிறேன்”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ உளருகிறான் நாளைக்கு பார்ப்போம் என்று விட்டுவிட்டேன். எனக்கு இருந்த வேலையில் ஒரே களைப்பாக இருந்ததால் படுக்க சென்று விட்டேன்.

அன்று லீவாகையால் நிதானமாக எழுந்தேன்.

கணேஷைக் காணவில்லை. அவன் முன்பே எழுந்து வெளியில் சென்று விட்டதாகக் கூறினார்கள். இன்னும் சிலரும் கூட சென்றிருப்பதாக சொன்னார்கள்.


நானும் இன்னும் சிலரும் விசாரித்துக்கொண்டு அவர்கள் சென்ற இடம் தேடிச் சென்றோம்.

மிக உயரமான மலை. பள்ளத்தாக்கு. அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தால்?

ஒரே கூட்டமாக இருந்தது. கிட்டே போய் பார்த்தப்புறம் தான் கொஞ்சம் புரிந்தது. அது ஒரு சுற்றுலா தலம்.கை கால் இடுப்பு என்று பிணைத்து உடலில் ஒரு பலமான பெல்ட் கட்டிக் கொண்டு உயரத்தில் இருந்து குதித்து பின் மின் மோட்டார் மற்றும் இரண்டு உதவியாளர்களைக் கொண்டு மேலே தூக்கி விடுவார்கள்.காசுகொடுத்து இதெல்லாம் செய்யவேண்டுமா?

சில வெள்ளைக்கார ஆட்கள் குதித்தார்கள். சிலர் ஜோடியாக குதித்தார்கள்

அடுத்து எங்கள் டீம் …
முதலில் கணேஷ்.. பெல்ட் கட்டிக்கொண்டு ரெடியானான். உச்சியில் விளிம்புக்கு அருகே வந்து நின்றான்.குதிக்கப்போறேன்.. குதிக்கப்போறேன் என்று பாவ்லா காட்டிக்கொண்டிருந்தான்.

க்யூ பெரிசாகிக்கொண்டிருக்கவே.. ஊழியர் பொறுமையில்லாமல் திடிரென்று தள்ளிவிட்டார். அப்படியே ஒரு 600 அடி பள்ளம் இருக்கும்.
கொஞ்ச நேரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை மோட்டார் போட்டு மேலே தூக்கிவிட்டார்கள்.

எனக்கு பகீரென்று இருந்தது. கீழே குனிந்து பார்த்தால் வாந்தி வந்துவிடும் போலிருந்தது. பெல்ட் அறுந்து விழுந்தால் என்ன ஆகும்?
என்னதான் பலமான பெல்ட் என்றாலும் எதற்கு ரிஸ்க்.? பிழைக்க வந்த இடத்தில் இதெல்லாம் தேவையா? என்று நினைத்தேன்.எல்லோரும் குதிக்கவே எனக்கும் ஆசை வந்து விட்டது. ஊரில் போய் போட்டோவெல்லாம் காட்டலாமே என்று நினத்தேன்.

கட்டணம் விசாரித்தால் அநியாயத்திற்கு சொன்னார்கள். ஒரு நாலைந்து நாள் ஓட்டலில் சாப்பிட்டுவிடுவேன்.

நான் ஒரு ஐடியா பண்ணினேன். அங்கிருந்த ஊழியரிடம் கேட்டதில் அவரும் ஒத்துக்கொண்டார்.

என் (இம்சை அரசன்) ஐடியா இது தான் (வீட்டில் சொல்லிவிடாதீர்கள்). பெல்ட் எல்லாம் கட்டிக்கொண்டு குளோசப்பில் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டியது. பிறகு வேறு யாரோ குதிக்கும் ஒரு போட்டோ லாங் ஷாட்டில் எடுத்து கொள்ள வேண்டியது (லாங் ஷாட்டில் லைட்டிங் சரியில்லாததால் முகம் சரியாகத் தெரியவில்லை என்று சொல்லிவிடலாம்). என் ஆல்பத்தில் இரண்டையும் பக்கம் பக்கத்தில் ஒட்டிவிட வேண்டியது.

இப்படியாக நான் மலை மேலிருந்து குதித்த அனுபவம் இனிதே முடிந்தது.

திராட்சை சாப்பிடறீங்களா?

ஒரு நாள் பஸ்சுக்கு காத்திருந்தேன். சற்று தள்ளி ஒருவன் தள்ளுவண்டியில் திராட்சை விற்றுக்கொண்டிருந்தான். பஸ் ஸ்டாப்பில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அப்பொழுது தான் ஒரு பஸ் போயிருக்க வேண்டும்.

தள்ளுவண்டிக்காரன் என்னிடம் பேச்சுக்கொடுத்தான்.

“என்ன சார் பஸ்சுக்கு நிக்கிறீங்களா?”
(இது என்ன கேள்வி? பின்ன பிளேனுக்கா நிக்கறேன்?)

“ஆமாப்பா, எப்ப வரும்னு தெரியல.”

“எனக்கும் தெரியாது சார், நான் இன்னைக்கு இங்க நிப்பேன், நாளைக்கு ரெயிலடியில இருப்பேன். அடுத்த நாள் இன்னொரு எடம்“

“என்ன வெயில் சார். ரெண்டு நாளா நல்ல மழை இன்னிக்கு எப்பிடி வெயில் அடிக்குது”. சொல்லிக்கொண்டே மூக்கை சிந்தி சற்று தள்ளி உதறினான்.

“உங்களுக்கு ஒரு அரைக்கிலோ போடவா? அருமையான திராட்சை சார். கொட்டையில்லாதது. சீசன் முடியப்போகுது மகாராஷ்டிராவில இருந்து வரணும். டிசம்பர்ல ஆரம்பிச்சு ஏப்ரல் வரைக்கும் இருக்கும்”.

“வேண்டாம்பா நேத்துத் தான் அரை டஜன் வாழைப்பழம் வாங்கினேன் இன்னும் அப்பிடியே இருக்கு. அப்புறம் பார்க்கலாம்”

(மூக்கை சிந்தி.. அந்தப்பக்கம் திரும்பி உதறிவிட்டு கால் சட்டையில் துடைத்துக் கொண்டான்)

“என்னப்பா ஜலதோசமா?”

“ஆமா சார் தடுமன் புடிச்சுகிச்சு, ரெண்டு நாலா மழைல்ல”

“ஏம்பா கர்சீப் எதுவும் கொண்டு வரலையா?”

“துண்டா சார்? என்னா சார் செய்றது அவசரத்தில வந்திட்டேன்.”

“ஏம்பா இந்த பழத்தில் தண்ணியெல்லாம் தெளித்து கழுவலாமே”

“அட நீங்க ஒண்ணு தண்ணி ஊத்துனா அப்பிடியே அழுகிடும்”

ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் என்று சத்தத்துடன் சளியை உதறினான்
(இந்த முறை கால் சட்டையில் துடைத்துக்கொள்ளவில்லை போல இருக்கே?)“ஒரு நாளைக்கு எவ்வளவு மெட்ராசுக்கு வருதுன்னு நினனக்கிறீங்க. சுமார் 100 டன். விலை இறங்கிப்போச்சு சார் வித்து தள்ளியாகணும்.
ஒரு பெட்டிக்கு அஞ்சு கிலோ ரூ 180க்கு எடுக்கிறோம்.

மீண்டும் ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்.


“திராட்சை….திராட்சை அரைக்கிலோ இரூபது ரூபா” கத்தினான்

அப்பொழுது இன்னொருவர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார்.
“ஒரு அரைக்கிலோ போடுப்பா” என்றார்.

பழங்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்

தராசுக்குள் கவனித்தேன் ஒரு மாதிரி வெளிர் பச்சையாக தெரிந்தது. சூரிய ஒளி பட்டு பளபளத்துக் கொண்டிருந்தது.
(திராட்சையும் தான்)

Mar 14, 2009

படித்த (மற்றும் படிக்க நினைத்த) சரோஜாதேவி புத்தகங்கள்

படித்த (மற்றும் படிக்க நினைத்த) சரோஜாதேவி கதைகள்

"ஆ ஐயோ அடிக்காதே அடிக்காதே"

"ஐயையோ அழிக்காதே!"

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28

சே! அட போங்கப்பா, எவ்வளவு கஷ்டப்பட்டு லிஸ்ட் போட்டுவச்சிருந்தேன். தங்கமணி வந்து அழிச்சிட்டு போய்ட்டார்.

டோண்டு சார், ஜ்யோவ்ராம், யாரிடமாவது லிஸ்ட் இருக்கும் பார்ப்போம்.

Mar 12, 2009

படித்த (மற்றும் படிக்க நினைத்த) புத்தகங்கள் - பகுதி 3

முந்தைய பதிவு 1 மற்றும் பதிவு 2
ன் தொடர்ச்சி

ஆஹா! சாண்டில்யன் புத்தகங்கள் விட்டுப் போய்விட்டனவே என்று நினத்தேன்.


அலை அரசி
அவனி சுந்தரி
இந்திர குமாரி
இளைய ராணி
உதய பானு
கடல் புறா 1
கடல் புறா 2
கடல் புறா 3
கடல் ராணி
கடல் வேந்தன்
கவர்ந்த கண்கள்
கன்னி மாடம்
சந்திரமதி
சித்தரஞ்சனி
செண்பகத் தோட்டம்
சேரன் செல்வி
நங்கூரம்
நாக தீபம்
நாகதேவி
நிலமங்கை
நீலரதி
நீலவல்லி
நீள் விழி
பல்லவ திலகம்
பல்லவ பீடம்
பாண்டியன் பவனி
புரட்சிப் பெண்
மங்கலதேவி
மஞ்சள் ஆறு
மண்மலர்
மதுமலர்
மலை அரசி
மலைவாசல்
மனமோகம்
மன்னன் மகள்
மாதவியின் மனம்
மூங்கில் கோட்டை
மோகனச் சிலை
மோகினி வனம்
யவன ராணி 1
யவன ராணி 2
ராணா ஹமீர்
ராணியின் கனவு
ராஜ திலகம்
ராஜ பேரிகை
ராஜ முத்திரை 1
ராஜ முத்திரை 2
ராஜ்யசிறீ?
ராஜயோகம்
வசந்த காலம்
விலைராணி
விஜய மகாதேவி
ஜல தீபம் 1
ஜல தீபம் 2
ஜல தீபம் 3
ஜலமோகினி
ஜீவபூமி

படித்த (மற்றும் படிக்க நினைத்த) புத்தகங்கள் - பகுதி 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி.

படித்த மற்றும் படிக்க நினைத்த (சுஜாதாவின்) புத்தகங்கள்

லிஸ்ட் பெரிதாகப் போனதால் தனிப் பதிவு.


கதை

6961
24 ரூபாய் தீவு
அடுத்த நூற்றாண்டு
அப்பா அன்புள்ள அப்பா
அப்ஸரா
அனிதா இளம் மனைவி
அனிதாவின் காதல்கள்
அனுமதி

ஆதலினால் காதல் செய்வீர்
ஆயிரத்தில் இருவர்
ஆரியப்பட்டா
ஆஸ்டின் இல்லம்
இதன் பெயரும் கொலை
இரண்டாவது காதல் கதை
இரயில் புன்னகை
இருள் வரும் நேரம்
இளமையில் கொல்
இன்னும் ஒரு பெண்
உள்ளம் துறந்தவன்
ஊஞ்சல்
எதையும் ஒருமுறை
எப்போதும் பெண்
என்றாவது ஒரு நாள்
ஏறக்குறைய சொர்க்கம்
ஐந்தாவது அத்தியாயம்
ஒரு நடுப்பகல் மரணம்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
ஒருத்தி நினைக்கையிலே
ஒரே ஒரு துரோகம்
ஓடாதே
ஓரிரு எண்ணங்கள்
ஓலைப்பட்டாசு
கடவுள் வந்திருந்தார்
கணையாழி கடைசிப் பக்கங்கள்
கணையாழியின் கடைசிப் பக்கம்
கம்ப்யூட்டர் கிராமம்
கருப்புக் குதிரை
கரையெல்லாம் செண்பகப்பூ
கற்பனைக்கும் அப்பால்
கனவுத் தொழிற்சாலை
காகிதச் கங்கிலிகள்
காகிதச் சங்கிலிகள்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காயத்ரி
குரு பிரசாத்தின் கடைசி தினம்
கொலை அரங்கம்
கொலையுதிர் காலம்
சாகசம் ஆயிரம்
சிங்கமய்யங்கார் பேரன்
சில வித்யாசங்கள்
சில்வியா
சிறீ?ரங்கத்துக் கதைகள்
சிறீரங்கத்து தேவதைகள்
சிறு சிறு கதைகள்
சின்னக்குயிலி
சுஜாதாவின் மர்மக் கதைகள்
செப்டம்பர் பலி
சொர்க்கத் தீவு
தங்க முடிச்சு
திசைக் கண்டேன் வான் கண்டேன்
தீண்டும் இன்பம்
தூண்டில் கதைகள்
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 1
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2
தோரணத்து மாவிலைகள்
நகரம்
நிதர்சனம்
நிர்வாண நகரம்
நில் கவனி தாக்கு
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
நில்லுங்கள் ராஜாவே
நிலா நிழல்
நிறமற்ற வானவில்
நிஜத்தைத் தேடி
நைலான் கயிறு
பத்து செகண்ட் முத்தம்
பதவிக்காக
பதினாலு நாட்கள்
ப்ரியா
பாதி ராஜ்யம்
பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்
பிரிவோம் சந்திப்போம் 1
பிரிவோம் சந்திப்போம் 2
புதிய நீதிக் கதைகள்
பூக்குட்டி
பெண் இயந்திரம்
பேசும் பொம்மைகள்
மத்யமர்
மலை மாளிகை
மறுபடியும் கணேஷ்
மனைவி கிடைத்தாள்
மாயா
மிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம்
மீண்டும் ஒரு குற்றம்
மீண்டும் ஜீனோ
மூன்று குற்றங்கள்
மூன்று நாள் சொர்க்கம்
மூன்று நிமிஷம் கணேஷ்
மேகத்தைத் துரத்தினவன்
மேற்கே ஒரு குற்றம்
யவனிகா
ரத்தம் ஒரே நிறம்
வசந்த காலக் குற்றங்கள்
வண்ணத்துப் பூச்சி வேட்டை
வஸந்த் வஸந்த்
வாய்மையே சில சமயம் வெல்லும்
வானத்தில் ஒரு மௌனத் தாரகை
வானமென்னும் வீதியிலே
விக்ரம்
விஞ்ஞானச் சிறுகதைகள்
விடிவதற்குள் வா
விபரீதக் கோட்பாடு
விருப்பமில்லாத் திருப்பங்கள்
விழுந்த நட்சத்திரம்
வீட்டுக்குள் வரும் உலகம்
வேணியின் காதலன்
வைரங்கள்
ஜன்னல் மலர்
ஜீனோம்
ஜேகே


பொது

401 காதல் கவிதைகள்
ஆழ்வார்கள்
உயிரின் ரகசியம்
என் இனிய இயந்திரா
கமிஷனருக்குக் கடிதம்
கற்றதும் பெற்றதும்
சுஜாதா பதில்கள் 1
சுஜாதா பதில்கள் 2
சுஜாதாவின் நாடகங்கள்
தலைமைச் செயலகம்
திரைக்கதை எழுதுவது எப்படி
திரைக்கதை பயிற்சிப் புத்தகம்
பாரதி இருந்த வீடு
விரும்பிச் சொன்ன பொய்கள்
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்


அறிவியல் கணினி

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்
கணிப்பொறியின் கதை
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
சிலிக்கன் சில்லுப் புரட்சி
பாமரருக்கும் படித்தவர்க்கும் கணிப்பொறி
வீட்டிற்குள் ஒரு உலகம்
வீட்டிற்குள் வரும் உலகம் இண்டர்நெட்
மெரீனா
அறிவோம் சிந்திப்போம்
நானோ டெக்னாலஜி
அம்பலம் இணைய இதழ்த் தொகுப்பு


இலக்கியம் கட்டுரை

21ம் விளிம்பு
இந்நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்
இன்னும் சில சிந்தனைகள்
எழுத்தும் வாழ்க்கையும்
கடவுள்
கடவுள் இருக்கிறாரா
கடவுள்களின் பள்ளத்தாக்கு
சிறுகதை எழுதுவது எப்படி
தமிழ் அன்றும் இன்றும்
விவாதங்கள் விமர்சனங்கள்
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
புறநானூறு ஓர் எளிய அறிமுகம்
திருக்குறள் புதிய உரை
திருக்குறள் புதிய உரை
ஏன் எதற்கு எப்படி 2
கற்றதும் பெற்றதும் 1
கற்றதும் பெற்றதும் 2
கற்றதும் பெற்றதும் 3
கற்றதும் பெற்றமும் 4
ஏன் எதற்கு எப்படி 1

Mar 11, 2009

ஒபாமா

Mar 9, 2009

கவர்ச்சி, ஜொள்ளு படங்கள்

பிளாக் ஆரம்பித்து விட்டேன். ஒருவரும் வருவதாகவோ, பின்னூட்டம் போடுவதாகவோ தெரியவில்லை என்ன செய்யலாம் என்று நண்பர் ஒருவரிடம் ஐடியா கேட்டேன்.

சும்மா மொக்கையாக எழுதிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஏதாவது ஜொள்ளுப் படங்கள் போட்டுப்பார். என்றார்.

அதான். ஹி ஹி!!
Mar 5, 2009

முக்கிய அறிவிப்பு !

வலைபதியும் அன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

கீழ்க்கண்ட பதிவர் வலைப்பெயர், புனைப்பெயர்கள் காப்பிரைட்டுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. என் அனுமதியில்லாமல் யாரும் பயன் படுத்த வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அசலூரான்
அசிங்கம்
அப்பவே சொன்னேன்
அரை உழக்கு
ஆட்டய போட்டவன்
ஆள் அம்பு
இப்பவும்
உசக்கை
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்
ஏடாகூடம்
ஒண்டிக்கு ஓண்டி
கரி நாக்கு
கருமம்
கலிகாலம்
கவுரதை
காலக் கெரகம்
குட்டிச்சுவர்
கும்பிடரேனுங்க
குரங்குப் பெடல்
கோடாங்கி
கௌபீனம்
சவத்த தள்ளு
சாணி
சீட்டியடிப்பவன்
சூடு சொரணை
சூதுவாது
சொம்பு
சோப்ளாங்கி
சோம்பேறி
ஞொக்க மக்கா
டவுசர்
தற்குறி
தத்துபித்து
திண்ணை தூங்கி
துஷ்டன்
தெண்டம்
நரக வாசி
நாக்கு வழிப்பவன்
நாராசம்
நாலுந் தெரிஞ்சவன்
பன்னாடை
பாக்கலாம்பா
பெரிசு
பையப்போ
மய்க்காநாள்
மூளைக்காரன்
விசாரித்தவன்


மேற்கண்ட பதிவர் / வலைத்தள பெயர்கள் / புனைப்பெயர்கள்
நான் யோசித்து வைத்தவை. ஒரு வேளை நான் வேண்டாமென்று விட்டுவைத்து, அது வேண்டுமென்றால் ஒரு நல்ல ராயல்டி கொடுத்து பயன்படுத்தலாம் !

--பதிவர் பெயர்கள் இன்னும் தொடரும்!கீழ்கண்ட பதிவர்கள் பெயர் வைப்பதில் எப்படியோ முந்திக்கொண்டதனால் போகட்டும் என்று விட்டு விடுகிறேன்,

மேலும் இவர்கள் கொஞ்சம் (மொக்கையாக இருந்தாலும்) சுவாரசியமாக எழுதி என் favorite லிஸ்டில் இருப்பதால் பிழைத்துப்போகட்டும் !


டோண்டு
இலவசம்
யாத்ரீகன்
எண்ணங்கள்
அசடு (http://www.asadu.blogspot.com/ ஒண்ணுமே பதியல, தெண்டம்)
அம்மாஞ்சி
ஆடுமாடு
இணைய குசும்பன்
இம்சை
இம்சை அரசி
உருப்படாதது
உளரல்கள்
கப்பி பய
கிருக்கன்ஸ்
கும்மாளம்
கைப்புள்ள

சும்மா (அநியாயம்! இந்த தமிழ் பெயரை summa.blogspot.com ஒரு illinois வெள்ளைக்காரன் தட்டிக்கிட்டு போய்ட்டான்.)

தெரியல!
நடைவண்டி
பிச்சைப்பாத்திரம்
பினத்தல்கள்
பைத்தியக்காரன்
யளனகபக (இதே மாதிரி ஆங்கிலப்பதிவு http://www.asdfgf.blogspot.com/)
யோசிங்க
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
வெட்டிப்பயல்
வெட்டிவம்பு

--சரி நடந்தது நடந்து போச்சு. இனிமேல் ஜாக்கிரதையாக இருப்போம்!

மஞ்சுவிரட்டு / ஜல்லிக்கட்டு காளையும் நானும்

ஊர் திருவிழா மற்றும் பொங்கல் சமயங்களில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.

எவ்வளவோ முயற்சித்தும் பலமுறை கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

ஆண்டுதோறும் நடக்கும். இந்த ஆண்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால் கிராமத்தினர் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

இந்த முறை ஊரில் இருந்தேன். தோதாக லீவு வேறு.

இந்த முறை எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

ஆரம்பிப்பதற்கு வெகு முன்னரே சென்றுவிட்டேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன.
ஏகப்பட்ட போலிஸ் பாதுகாப்பு வேறு.

ஆரம்பித்து விட்டது. காளைகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

எதிர்பட்ட அனைவரையும் முட்டிமோதி தள்ளிக்கொண்டு சென்றன.

கூரான கொம்பு, உருண்டு திரண்ட திமில். பார்பதற்கே பயங்கரமாக இருந்தன.
வர்ணனையாளர்கள் பீறிடும் இரத்தத்தையும் வர்ணித்து கொண்டிருந்தார்க்ள்.
தூக்கி வீசப்பட்ட இளைஞர்களை டாக்டர்கள் குழு அவசர சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள்.

சிலருக்கு கை காலில் காயம். சிலருக்கு குடல் சரிந்து தூக்கிக்கொண்டு காப்பற்ற ஓடிக்கொண்டிருந்தார்கள்.

காளைகளின் கொம்புகளில் இரத்தம்.

வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஊரில் இதைக் காட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

ஒரு காளை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நல்ல கூரிய கொம்பு. சிலுப்பிகொண்டும் உறுமிக்கொண்டும் இருந்தது. அதன் மேல் இரத்தகலராக இருந்தது.

குங்குமத்தை கொட்டியிருக்கிறார்களா? அல்லது யாரையும் முட்டிய இரத்தக்கரையா?

எனக்கு அருகில் வந்தது. என்ன ஒரு பத்து பனிரெண்டு அடி தூரம் இருக்குமா?

ரொம்ப நேரம் சுற்றி வந்தது. இன்னும் நெருங்கட்டும் பார்க்கலாம்.

கொம்பால் தரையை குத்திக் கிழித்தது. புழுதி பறந்தது. காலால் மண்ணை கீறியது. உறுமியது.

"யார் கிட்ட விளையாடுறே. வா ஒரு வழி பண்ணிடறேன்".

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தது. இப்ப திமிலை அமுக்கிப் பிடித்து ஒரேயடியா மோதி
மடக்கி விடலாம் என்று நினைத்தேன். அப்போ தான் பின்னாலேருந்து ஒருத்தன் துரத்திக்கொண்டு வந்தான். அடச்சே! நேராக ஒடிவிட்டது.

"அடேடே.. அப்புறம்".

அப்புறமென்ன.. எவ்வளவு நேரந்தான் தென்னை மரத்து மேலேயே இருக்கிறது?.
இறங்கி வீட்டுக்கு போயிட்டேன்.

Mar 4, 2009

வேர்கடலையும், செருப்பும், புத்தகமும் மற்றும் மேட்டர் சிடியும்

(ஹி ஹி! பின்நவினத்துவம், நான்லினியர், கவிதைகளும் இன்றைய இலக்கியமும்! அப்டீன்னெல்லாம் எழுதலாம்னா, ஒண்ணும் தோணமாட்டேங்குது.அதுனால..)

வேர்கடலையும், செருப்பும், புத்தகமும் மற்றும் மேட்டர் சிடியும்

ஒரு நாள் நண்பர் ஒருவருடன் சினிமாவிற்கு போக பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தேன். பஸ் வரக்காணோம். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அருகே ஒரு தள்ளுவண்டியில் ஒருவன் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வறுக்கும் வாசனை வந்து கொண்டிருந்தது. நண்பர் வேர்கடலை வாங்கலாம் என்றார். அவன் இரண்டு பேருக்கும் கொடுத்துவிட்டு "3 ரூவா குடு சார்" என்றான்.

நண்பர் பணத்தை கொடுத்துவிட்டு என்னிடம் மெதுவாக சொன்னார். “பாருங்க சார் அநியாயம் ஐம்பது காசு பெறும். கூசாமல் 1.50 சொல்கிறான்" என்றார்.

“சார் அவன் 100 பேருக்கு விற்று தான் ரூ 100 பார்க்க முடியும். நீங்களே சொல்லுங்க, அவனுக்கும் குடும்பம் குட்டி இருக்கும். என்ன பண்ணுவான்” என்றேன்.


இப்படி பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்த போது அவர் செருப்பு அறுந்து விட்டது.

பஸ் ஸ்டாப் அருகே இருந்த செருப்பு தைப்பவரிடம் கொடுத்து எவ்வளவு என்று கேட்டார்.

“பன்னெண்டு ரூவா ஆகும் சார் வேணா பத்து ரூவா குடு.”

நண்பர் 6 ல் ஆரம்பித்து 8 ரூபாயில் பேரம் முடித்தார்.

ஒருவழியாக தைத்து முடித்து வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

நண்பர் சொன்னார். “பத்து நிமிடம் ஆகியிருக்குமா? சின்ன வேலை இதற்குப் போய் பன்னெண்டு ரூவா கேட்டான்”

“விடுங்க சார் நாள்பூரா காத்திருக்க வேண்டும். ஒரு பத்துப் பேராவது வந்தால் தான் அவனுக்கு இன்றைய பொழுது ஓடும்.” என்றேன்.

இப்பொழுது பஸ் வந்து விட்டது.

ஏறி இறங்கி தியேட்டர் நோக்கி நடந்தோம்.

பிளாட்பார்மில் ஒரு புத்தகக் கடையைப் பார்த்தேன். பலவகையான புத்தகங்கள்! நாவல்கள், கதைகள், கட்டுரைகள் சரோஜாதேவி புக்ஸ் கூட இருந்தது.

சில பாக்கெட் நாவல்கள் எடுத்து விலை கேட்டேன் மொத்தம் 70 ரூவா குடுங்க என்றான். பேரம் பேசி 30 ரூபாய் குடுத்துவிட்டு புறப்பட்டேன்.

நண்பர் ஏதோ கேட்க வாயெடுத்து பிறகு ஒன்றும் சொல்லாமல் வந்தார்.

அடுத்து ஒரு சிடி கடையைப் பார்த்தேன். பிளாட்பார்மில் கடை விரித்திருந்தான்.
விசிடி, எம்.பி.3, பழைய பாடல்கள், புதிய பாடல்கள், காமெடி, ஒலியும் ஒளியும், படங்கள். இன்னும் நிறைய இருந்தது.

“எவ்வளவுப்பா?” “சார் 35 ரூவா உங்களுக்கு 30 ரூவாக்கி தர்றேன்.”

“25க்கு தருவியா?”

அவன் முனகிக்கொண்டே, “சரி சரி எடு சார்” என்று சொல்லிவிட்டு அடுத்த வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தான்

சில எம்.பி.3 சிடி செலக்ட் பண்ண்டிக்கொண்டிருக்கும் போது நண்பர் பொறுக்க முடியாமல் கேட்டார் “உங்களுக்கே தெரியும் சொல்லுங்கள் ஒரு சிடி அடக்கவிலை எவ்வளவு? 25க்கு கேட்கிறீர்களே. அநியாயம்! என்னை மட்டும் சொல்றீங்க.?

Blank CD எவ்வளவு? “8 அல்லது 10 ரூவா”
CD Recording ? 6 அல்லது 8 ரூவா”
Label printing, Plastic cover?

“என்ன...மொத்தம் 22 ரூவா இருக்கலாம். அப்படியும் லாபம் தானே?” என்றேன்.

நண்பர் “1 சிடிக்கு 3 ரூவாயா? இவனுக்கும் குடும்பம் இருக்கலாம்” எப்ப எவ்வளவு சிடி வித்து சம்பாதிப்பது, குடும்பத்தை நடத்துவது?” என்றார்.

இப்பொழுது சிடிக்காரன் “எடுத்தாச்சா சார்” என்றான். “ஆச்சுப்பா”

“சார் ‘மேற்படி சிடி’ கேக்குறார்” என்றேன்.
“என்ன?”

“சார் ‘மேட்டர் சிடி’ கேக்குறார்பா” என்றேன்” நண்பர் கேட்கவேயில்லையே என்று விழித்தார்.

சிடிக்காரன் அவரிடம் திரும்பி “எல்லாம் இருக்கு சார், 80 ரூவா, வேணா சாருக்காக 70 ரூவாக்கி தரலாம்.”

“என்னிடம் குனிந்து என்ன சொல்றான்” என்றார்

“மேட்டர் சிடி, அதாவது ஷகிலா, மரியா, ரேஷ்மா, பிரதிபா, சஜினி, மலையாளப் படம், அஞ்சரைக்குள்ள வண்டி, மழு, பிடிக்கிட்டாப் புள்ளி, அவளோட ராவுகள், அடல்ஸ் ஒன்லி, புளூ பிலிம், ‘ஒரு மாதிரி’ சிடி எல்லாம் இருக்காம்!”

நண்பர் என்னை முறைத்தார்.

“சார் 60க்கு எடு சார் நாலஞ்சு தான் பாக்கி, இன்னிக்கு 30, 35 தான் கொண்டுவந்தேன்.”

கடைக்காரனிடம் எம்.பி.3 க்கு செட்டில் செய்து,
“அவர் மிட்நைட் மசாலா பார்த்துக்கிறாராம். இன்னொரு நாள் பாக்கலாம்.” என்று விட்டு நகர்ந்தேன்.

நண்பரிடம் சொன்னேன், “கேட்டீர்களா ! சாயங்காலம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 மேட்டர் சிடி வித்திருக்கான் 30 x 30 தொள்ளாயிரம் லாபம்!
இவன் நம் வியாபாரத்தை நம்பியில்லை. புரிந்ததா?

என்றாவது ஒரு நாள் அவர் மேற்படி சிடியை 45க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கலாம்! கருப்பு பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை. (இன் பண்ணாமல்) பார்த்தால் விசாரித்ததாக சொல்லுங்கள்! பார்த்து ரொம்ப நாளாகிறது !.

Mar 2, 2009

கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம் !

முதன் முதலாக கம்பியூட்டர் ஒன்று வாங்கலாம் என்று நினத்தேன். (சமீபத்தில் கிபி 2000)

பெண்டியம் 3, (assembled)

500 Mhz, 10gb harddisk, CD writer, 15 inch monitor, speaker (windows 98 pirated?)
Dictionary CD Free, Typing Tutor CD Free

விலை ரூ 44,750/-

தெரிந்தவர் மூலமாக பேரம் பேசியதில் 42,200 க்கு படிந்து வாங்கியாகி விட்டது.


அதன் பிறகு ஒரு 10, 15 நாள் ஆகியிருக்கும்.
என் வீட்டம்மா செய்தித்தாளை கொண்டு வந்து காட்டினார்.

அதில் ஒரு விளம்பரம் !

Discount Sale !

Brand New பெண்டியம் 3 Computer,
800 Mhz, 20gb HDD, CD writer, 17 inch monitor, speaker, modem (OS windows 98)
1 year Guarantee !
Encyclopedia CD free, Games Cd free !!

விலை ரூ 39,500/-

விளம்பரத்தைக் காட்டிவிட்டு வீட்டம்மா ஒரே சத்தம்

“அவசரப்பட்டுவிட்டீர்கள், நஷ்டம்”
(நான் : அப்படித்தான் இருக்கும் என்ன பண்ண முடியும்!)கொஞ்ச நாள் கழித்து ஒரு “Music system” வாங்க ஐடியா பண்ணினேன்.

Exchange offer !

“பழைய டேப் ரெக்கார்டரைக் கொடுத்துவிட்டு CD system !

ஆடியோ சிடி,
டேப் ரெக்கார்டர்
FM / AM Radio
With Remote control !
Original price Rs. 11,250/- exchange price Rs. 8250/- any old tape recorder in working condition accepted.”

ஆகா !! Music System with Remote control.. படுத்த படியே இயக்கலாம். உடனடியாக வீட்டில் இருந்த ஒரு பழைய (?) டேப் ரெக்கார்டரை கொடுத்துவிட்டு புது Music System வீட்டுக்கு கொண்டுவந்தேன்.

நன்றாகத்தான் ஒடியது.

ஒரு மாதத்திற்கு பிறகு வீட்டம்மா பேப்பரில் ஒரு விளம்பரம் காட்டினார்.

VCD system! Without any exchange !!

ஆடியோ சிடி
வீடியோ சிடி
டபுள் கேசட் ரெக்கார்டர்
FM / AM Radio
With remote control
Price Rs. 9,500/-

இந்த முறை வீட்டம்மாவிடம் இருந்து அர்ச்சனை

“உங்களுக்கு யோசனையே கிடையாது, பொறுமையே இல்லை”
(நான் : அப்படித்தான் இருக்கும் என்ன பண்ண முடியும்!)

இதுபோல் அடிக்கடி எதையாவது டக்கென்று முடிவு செய்த பிறகு
அதை விட attractive ஆக ஏதாவது கண்ணில் படுவதும் வழக்கமாக இருந்தது.

கொஞ்ச நாள் முன்பு கூட கலர் டீவி வாங்கிய பிறகு அதிக discount ல் ஒரு சூப்பர் மாடல் டீவிக்கு விளம்பரம்! வீட்டம்மா காட்டினார். சுமார் 4000 ரூ நஷ்டம்.

இந்த முறையும் வீட்டம்மா விடமிருந்து பலத்த சத்தம்.

“உங்களுக்கு எல்லாத்துக்கும் அவசரம், கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்”
(நான் : அப்படித்தான் இருக்கும் என்ன பண்ண முடியும்!)

இப்படி இருக்கும் போது சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன்!

“மணமகன் தேவை !
அழகான, நல்ல வசதி படைத்த, பெரிய கம்பெனியில் வேலை செய்யும் பெண். “

கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமோ !


ஆனாலும் அந்த விளம்பரத்தை என் வீட்டம்மாவிடம் காட்டவில்லை!
(நான் : அப்படித்தான் இருக்கும் என்ன பண்ண முடியும்!)

வாங்க நினைத்த லேட்டஸ்ட் மாடல் செல்போன் !

சரி எல்லோரும் வைத்து இருக்கிறார்களே நாமும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்து எனக்கென்று செல்போன் வைத்துக்கொள்ள ஆரம்பித்து ஒரு நாலைந்து வருடம் ஆகிறது.

முதல் போன் ஒரு சாதாரண போன் தான். மார்க்கெட்டுக்கு வந்து எப்படியும் இரண்டு மூன்று வருடமாவது இருக்கும். இதில் பேசலாம், எஸ் எம் எஸ் உண்டு, அலாரம் வைத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

ரேடியோ போன்ற வசதிகளெல்லாம் அப்பொழுது அவ்வளவாக பிரபலம் அடையவில்லை (போட்டோ, எம் பி 3.. மூச்).

அப்பொழுதே பேசிக் வசதிகள் மட்டுமே உள்ள போன்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 3000க்கு மேல் விலை இருக்கும்.

கேமரா உள்ள போன்கள் ? கிட்டத்தட்ட ரூ 12,000/- (சுமார் 4, 5 வருடங்களுக்கு முன்பு)

எதற்கு சொல்ல வந்தேன் என்றால். டெக்னாலஜி வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு வசதிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இப்பொழுது பல்வேறு வசதிகள் கொண்ட போன்கள் இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. (சீன மாடல்கள் வேறு)

ரொம்ப நாளாக பழைய மாடலையே வைத்திருக்கிறோமே லேட்டஸ்டாக ஒன்று வைத்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன்

சரி, எந்தமாடல் நமக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள்.

நானே விளம்பரங்களையெல்லாம் பார்த்து ஒரு மாடல் பற்றி யோசித்துவிட்டு (கிட்டத்தட்ட 7 ஆயிரம் ரூபாய்), ஒரு நண்பரிடம் யோசனை கேட்டேன்.

இதில் என்னென்ன வசதிகள் உள்ளன? எதனால் இதை செலக்ட் செய்கிறீர்கள் என்றார்.

ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தேன்.

கேமரா 1.2 மெகாபிக்சல்
எப் எம் ரேடியோ, எம்.பி.3,
புளூடூத்
மெமரிகார்டு


பொறுமையாகப் பார்த்துவிட்டு நண்பர் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

1. நீங்கள் போட்டோ எடுப்பதில் எந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பீர்கள்? டைரி எழுதுவதைப்போன்று தான் இதுவும் இருக்கும். ஆரம்பத்தில் ஆர்வமாக 30, 40 போட்டோ வரை எடுப்பீர்கள், தரமாகவும் இருக்காது. பிறகு கேமரா உபயோகம் இருக்காது.

2. எப் எம் ரேடியோ ? இப்பொழுதெல்லாம் பிளாட் பார்மில் கூட தரமான டிஜிட்டல் ரேடியோ ரூ 30க்கு கிடைக்கும்.

3. எத்தனை எப் எம் ஸ்டேஷன்கள் உள்ளன! அவைகளைக் கேட்டுக்கொள்ளலாமே எதற்கு திரும்பத் திரும்ப அதே எம் பி 3 பாடல்கள்?

4. புளூடூத், மெமரிகார்டு? இதை எப்படி பயன்படுத்துவது என்றே பலருக்கு இன்னும் புரியவில்லை. அவசியம் தானா?

5. பழைய போனை என்ன செய்வீர்கள்?


சரி இவரிடம் கேட்டால் இன்னும் ஏதாவது அட்வைஸ் செய்வார், நாமாகக் கடைக்கு சென்று பார்ப்போம் என்று முடிவு செய்து போய் விலை கேட்டேன்.

கவுன்டரில் இருந்தவர், சார் இந்த மாடலுக்கு ஆபர் முடிந்துவிட்டது. தற்பொழுது ரூ 7,350. ஆனால் எக்சேஞ் ஆபர் இருக்கிறது. என்றார்.

என் பழைய போனைக் கொடுக்க அதை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு பிறகு ஓப்பன் செய்து பாட்டரி ஒரிஜினலா என்றெல்லாம் பார்த்து விட்டு சொன்னார்.

“நாங்கள் ரூ 100க்கு த்தான் எடுப்போம், உங்களுக்கு ரூ125 போடலாம் என்றார்”.

எக்சேஞ் விலையைக் கேட்டு அதிர்ந்து போய் (ரூ 3200 க்கு வாங்கிய போனுக்கு ரூ.125 ஆ!!) பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன்.

வரும் வழியில் ஒரு செல்போன் ஆக்ஸஸரீஸ் கடையில் காண்பித்து என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் கழட்டிப்பார்த்துவிட்டு சொன்னார். “பேட்டரி வீக்காக இருக்கிறது. நல்ல தரமான பேட்டரி வந்திருக்கிறது. டுப்ளிக்கேட் தான் ஆனாலும் நல்ல குவாலிட்டி, பேனல் கூட மாற்றிக்கொள்ளலாம், மொத்தம் ரூ 120 ஆகும் என்றார்.

சரி என்று மாற்றச்சொல்லி வாங்கிக்கொண்டு பிளாட் பார்மில் எப் எம் ரேடியோ ரூ 45 (டிஜிட்டல்) வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இன்று வரை ஒன்றும் பிரச்னையும் இல்லை நன்கு இயங்கிக்கொண்டிருக்கிறது.

அதே நண்பரை போன வாரம் மவுண்ட் ரோடில் வைத்துப் பார்த்தேன். சில பல விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் கையில் இருந்த செல் போனை கவனித்தேன்.

சொன்னார் “லேட்டஸ்ட் போன், டச் ஸ்கிரீன். அனைத்து வசதிகளும் இருக்கிறது!! விலை ரூ. 18,260/- சீப்பாக கிடைத்தது!! மார்க்கெட் விலை ரூ. 23000 !!”