Top 10 - Talk of the வலை உலகம்!
1. 'வடை போச்சே' என்பது பற்றி பல பதிவர்கள், பதிவு மற்றும் பின்னூட்டத்தில் புலம்பி இருக்கிறார்கள்.
2. 32 கேள்விகள் பிரபலமாக இருந்தது போய் இப்பொழுது பத்து!
பத்து வழிகள், பத்து விமர்சனம், பத்து கேள்விகள், பிடித்த பத்து, பிடிக்காத பத்து என்கிற வகையில் எல்லோரும் பதிவிட ஆரம்பித்துள்ளார்கள்.
3. சுமார் பத்துக்கு மேற்பட்ட புது திரட்டிகள் எல்லாப் பதிவுகளுக்கும் போய் இணைத்துக் கொள்ளும்படி பின்னூட்டம் போடுகிறார்கள்.
4. எப்பொழுதும் 10 விருதுகளாவது வலையுலகில் வழங்க! அல்லது வாங்கப் படுகிறது.
5. கவிதை, கட்டுரை, கதைகள், நகைச்சுவை இவற்றை விட மொக்கை பதிவுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.
6. எல்லாப் புதிய பதிவர்களும் 10 இடுகைகளுக்குப் பிறகு சோர்ந்து விடுகிறார்கள்.
7. பத்து followers கிடைத்த பிறகு கிடைக்கும் சந்தோஷத்தில் உடனே 10 பதிவுகளுக்குப் போய் பின்னூட்டம் போடுகிறார்கள்.
8. பல பதிவர்கள் பின்னூட்டத்திற்கான மேட்டரையெல்லாம் அடுத்த பதிவிற்கான மேட்டராக ஆக்கிவிடுகின்றனர்.
9. Copy (Ctrl C) - Paste (Ctrl V) மட்டும் இல்லை என்றால் பல பதிவர்கள் இங்கே ஜல்லியடிக்க முடியாது.
10. பரபரப்பான தலைப்பை வைத்துவிட்டு அதற்கேற்ப விஷயம் கிடைக்காமல் பதிவர்கள் முழிக்கிறார்கள்!
Jul 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"ஆஹா! பல உண்மைகளை மெனக்கெட்டு போட்டு உடைச்சிருக்கீங்க.......
சூப்பர்"....பிரமாதம்.
இந்த "வடை போச்சுன்னா" அந்த வடை, அடுத்த வடை கிடைக்காமலேயா போயிடும்?
அடுத்த தெருவுல, அதான் இன்னொரு பதிவுல, யாரோ பாட்டி வடை சுடும் வாசனை இன்னுமா தெரியலை:-)
Post a Comment