Jul 21, 2009

Recession சந்திக்க சில யோசனைகள்

வேலை

1. வேலையை விடுவதை பற்றி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு யோசிக்க வேண்டாம்.

2. நேரத்திற்கு வேலைக்கு செல்லுங்கள். அதிக நேரம் அலுவலகத்தில் செலவிடுங்கள்.

3. அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. பிற டிபார்டுமண்டுகள்கும் உதவி செய்யுங்கள்.

5. வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள்.

6. நீக்கப்படவேண்டியவர்கள் பட்டியில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்க மேல் சொன்னவை உதவும்.

7. நிறுவனம் நஷ்டத்தில் ஓடினாலும் கடைசியாக இவரை நீக்கலாம் என்ற நிலையில் நீங்கள் இருக்க வேண்டும்.

8. முடிந்த அளவு நிறுவனத்திற்கு பணம் சேமிக்கும் வகைகளையோ அல்லது வருமானம் வரும் வழிகளையோ சொல்லி அதை செயல்படுத்த முயலுங்கள்.

9. மேலாளரிடம் முறைத்துக் கொள்ள வேண்டாம்.

10. இது என் தகுதிக்கு இல்லை என்று எந்த சிறிய காரியங்களையும் ஒதுக்க வேண்டாம்.இது வேலையை நிலைபடுத்திக் கொள்ள உதவும். இந்த சூழலில் வேலை போவது என்பது மிகவும் பெரிய இடியாக இருக்கும். வேறு வேலை கிடைப்பதும் கஷ்டம். கிடைத்தாலும் உங்களுக்கு பிடித்த வேலையாக இருப்பது சாத்தியம் இல்லை. இதை விட குறைந்த சம்பளம் தான் கிடைக்கும்.வீடு

1. வீடு செப்பனிடும் வேலை இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுங்கள்.

2. எலெக்டிரானிஸ் பொருட்கள் டிவி, விசிஆர், டேப் ரிக்கார்டர், எம்பி3, காமிரா
போன்றவற்றை வாங்குவதை தவிர்க்கவும்.

3. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். புதிய வியாதிகள் வராமல் தடுக்கலாம். மருத்துவ செலவு இந்த நேரத்தில் ஒரு பெரிய பாரம்.

4. வீட்டில் மனைவி படித்தவராக இருந்தால் ஏதாவது வேலையில் சேர்ந்து கூடுதல் வருமானத்திற்கு வழி செய்துக் கொள்ளுங்கள்.

5. யாருக்கும் கடன் தர வேண்டாம். தனக்கு மிஞ்சினால் தான் தானம். பிறருக்கு உதவி செய்யக்கூடாது என்ற கெட்ட எண்ணம் இல்லை. இப்போது வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வேண்டாம்.

6. கொடுத்த கடன், பிற வரவுகளில் கவனம் செலுத்து வசூல் செய்யுங்கள்.

7. கிரெடிட் கார்டில் எதையும் வாங்க வேண்டாம். உங்களிடம் 50,000 ரூபாய் ரொக்கமாக இருந்தால் இந்த கடன் அட்டை 2 லட்சம் வாங்கும் பொய்யான சக்தியை கொடுக்கும். அந்த பொய்யான சக்தி உங்களை பிரச்சனையில் ஆழ்த்தும்.

8. இரண்டு மூன்று கடன் அட்டைகள் இருந்தால் அதை அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டு ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

9. இப்போது இருக்கும் வீட்டிற்கு 5000 ரூபாய் வாடகை கொடுக்கிறீர்கள் என்றால் சற்றே வசதி குறைந்தாலும் 2500யில் சிறிய வீட்டிற்கு செல்ல முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் உடனே அதை செயல்படுத்துங்கள்.

10. மின்சார செலவு தண்ணீர் செலவை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

11. வீட்டு தொலைபேசியிலும் கை பேசியிலும் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் அதிகம் அரட்டை அடிப்பவராக இருந்தால் அதை இப்போதே நிறுத்துக் கொள்ளுங்கள்.

12. டாட்டா ஸ்கை சன் டைரக்ட் தவிர்த்து கேபிள் கிடைத்தால் போட்டுக் கொள்ளுங்கள்.

13. பிள்ளைகளுக்கு அதிகம் பாக்கெட் மணி கொடுப்பதை நிறுத்துங்கள்.

14. பழைய பொருட்களை எந்த அளவிற்கு உபயோகப்படுத்த முடியுமோ பாருங்கள். Reduce, Reuse, Recycle இந்நிலையில் ஒரு தாராக மந்திரம்.

15. நல்ல தெரிந்த நபர்களை Paying Guestஆக வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் கொடுக்கும் பணம் அவர்களுக்கு இடம் உணவு அளித்த பிறகும் நல்ல சேமிப்பு கிட்டும்.சுற்றுலா-பயணம்

1. எல்லா சுற்றுலா பயணங்களை தவிருங்கள்.

2. அலுவலக்திற்கு செல்லும் போது Car Pooling, ஷேர் ஆட்டோ, செய்ய முடியுமா என்று பாருங்கள். பெட்ரோல் செலவு குறையும்.

3. பேருந்துகளில் பயணம் செல்லும் பழைய விட்டுப் போன பழக்கத்தை நினைவு படுத்திக் கொள்வது நலம்.நட்பு சுற்றம்

1.சில தூரத்து திருமணங்களுக்கு செல்வதையும் தவிர்க்கலாம்.

2. அப்படி சென்றால் பணமாக தங்கள் அன்பளிப்புகளை தாருங்கள்.

3. உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு சற்றம் வெட்கம் இல்லாமல் நெருங்கியவர்களிடம் பணமாகவே தாருங்கள் என்று சொல்லலாம். தப்பில்லை.Shopping

1. அருகாமையில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்குவதை விடுத்து சற்று தொலைவாக சென்றாலும் Wholesale கடைகளில் சென்று சகாய விலையில் பொருட்களை வாங்குங்கள்.

2. கடைக்கு போவதற்கு முன் என்ன வேண்டும் என்று பட்டியலிட்டு வாங்குங்கள்.

3. அவற்றை மட்டும் வாங்குங்கள். Super Market சென்று கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கி வரவேண்டாம்.

4. தெரிந்த Brand மட்டும் வாங்குங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.

5. Toiletries அனைத்தும் இந்திய Brand வாங்குவதால் நிறைய மிச்சப்படுத்தலாம்.

நன்றி : லியோ மோகன்

4 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

அது ஒரு கனாக் காலம் said...

நல்லா மெனக்கெட்டு ... நிறைய ஆலோசனைகள் சொல்றீங்க ..கண்டிப்பா திருமதியிடம் காண்பிக்க போகிறேன், முடிந்த வரை நினைவில் நிறுத்தி ... செயலிலும் காண்பிக்க முயற்சிக்கிறேன்... நன்றி

அக்னி பார்வை said...

என்ன கொடும சார்

மெனக்கெட்டு said...

seidhivalaiyam.in,
அது ஒரு கனாக் காலம்,
அக்னி பார்வை,

நன்றி, மீண்டும் வருக.